செய்திகள்
முக ஸ்டாலின்

பொய்யுரை, புகழுரை வேண்டாம்: உண்மையை நேருக்குநேர் சந்திக்க விரும்புகிறேன்: ஆட்சியர் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

Published On 2021-05-07 12:28 GMT   |   Update On 2021-05-07 14:49 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கேஎன் நேரு, KKSSR  ராமசந்திரன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலையால் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கடுமையான நடவடிக்கை எடுத்தால் கொரோனா அலையை தடுக்க முடியும். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே பொய்யுரை, புகழுரையை நான் கேட்க விரும்பவில்லை. அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். மேலும் தினசரி கொரோனா பாதிப்பு 25,000 என்ற அளவில் உள்ளது. எனவே நோய் பாதிப்புக்கு ஏற்ப படுக்கை வசதி ஆக்சிஜன் வசதி தேவைபடுகிறது. அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News