செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

தர்மபுரி அரசு மருத்துவமனையில் 8 டாக்டர்களுக்கு கொரோனா

Published On 2021-05-07 10:52 GMT   |   Update On 2021-05-07 10:52 GMT
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப்பிரிவில் 35 டாக்டர்கள் சுழற்சி முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,350-க்கும் மேற்பட்டோருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப்பிரிவில் 35 டாக்டர்கள் சுழற்சி முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் முதுநிலை டாக்டர்களில் 8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 8 பேரையும் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல் இந்த டாக்டர்களுடன் பணியின்போது தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News