செய்திகள்
கைது

மதுரையில் டாக்டர் தம்பதி வீட்டில் நகை திருடிய பெண் கைது

Published On 2021-05-07 09:58 GMT   |   Update On 2021-05-07 09:58 GMT
மதுரையில் டாக்டர் தம்பதி வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை எஸ்.எஸ். காலனி ஸ்வரூப் நகரை சேர்ந்தவர் ஷேக் இக்பால் உசைன் (வயது 41). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் உதவி டாக்டராக வேலை பார்க்கிறார்.

ஷேக் இக்பால் மனைவி வனிதா. இவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நலப்பிரிவில் உதவி டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்

இவர்களது வீட்டில் மாடக்குளம் மெயின் ரோடு, கரட்டு கோனார் தெருவை சேர்ந்த வினோத்குமார் மனைவி ஜெயமாருதி (வயது 28) கடந்த 3 ஆண்டுகளாக வீட்டு வேலைகளை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் டாக்டர் வீட்டில் 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு கிராம் தோடு ஆகியவற்றை காணவில்லை. அப்போது ஷேக் இக்பால் எங்காவது தொலைந்து போயிருக்கலாம் தேடி எடுத்து கொள்ளலாம் என்று அஜாக்கிரதையாக இருந்து விட்டார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து 2 கிராம் மோதிரமும் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேக் இக்பால் இது தொடர்பாக எஸ்.எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜெயமாரி நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

Tags:    

Similar News