செய்திகள்
வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதையடுத்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.