செய்திகள்
முக ஸ்டாலின்

மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி -மு.க.ஸ்டாலின்

Published On 2021-05-07 09:36 GMT   |   Update On 2021-05-07 11:50 GMT
முதலமைச்சராக பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.



பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!

காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News