செய்திகள்
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

Published On 2021-05-07 08:43 GMT   |   Update On 2021-05-07 08:43 GMT
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பணியாக, கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.



இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News