செய்திகள்
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை

Published On 2021-05-07 06:19 GMT   |   Update On 2021-05-07 07:55 GMT
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.



இதையடுத்து முதல்வராக பதவியேற்றதும் கோபாலபுரம் புறப்பட்டு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

இதைத்தொடர்ந்து  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News