செய்திகள்
நகை கொள்ளை

நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.7½ லட்சம்- 35 பவுன் நகை கொள்ளை

Published On 2021-05-06 08:47 GMT   |   Update On 2021-05-06 08:47 GMT
போலீஸ் நிலையம் அருகே நகைக்கடை அதிபரை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

பட்டாளத்தை சேர்ந்தவர் சுராஜ். இவர் சவுகார்பேட்டையில் ஜெய் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு 9 மணி அளவில் அவர் கடையை மூடிவிட்டு ரூ.7½ லட்சம் ரொக்கம் மற்றும் 35 பவுன் நகையை ஒரு பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

சென்ட்ரல் ரெயில் நிலையம் வழியாக அல்லி குளம் கோர்ட்டு அருகே பெரியமேடு போலீஸ் நிலையம் பின்புற பகுதி வழியாக வந்து கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென சுராஜை வழிமறித்து நிறுத்தினர்.

அவர்கள் உருட்டுக்கட்டையால் நகைக்கடை அதிபர் சுராஜை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் சுராஜ் வைத்திருந்த நகை, பணம் இருந்த பையை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இந்த தாக்குதலில் சுராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரூ.7½ லட்சம் ரொக்கம் மற்றும் 35 பவுன் நகை கொள்ளை போனது குறித்து பெரியமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

சுராஜ் நகை, பணத்துடன் வருவதை அறிந்து கொள்ளையர்கள் அவரை பின் தொடர்ந்து வந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அவர்களை பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது.

போலீஸ் நிலையம் அருகே நகைக்கடை அதிபரை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News