செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பூரில் வேகமாக பரவும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 35ஆக அதிகரிப்பு

Published On 2021-05-05 10:05 GMT   |   Update On 2021-05-05 10:05 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 244ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 35 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு கிருமி நாசினி தெளித்து தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பூர் மாநகர் பகுதியில் 15 வேலம்பாளையம், மேட்டுப்பாளையம், எஸ்.ஆர். நகர், கே.வி.ஆர்.நகர் உள்ளிட்ட இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News