செய்திகள்
கொரோனா வைரஸ்

ஜோலார்பேட்டை பகுதியில் போலீஸ்காரர் உள்பட 33 பேருக்கு கொரோனா

Published On 2021-04-27 03:54 GMT   |   Update On 2021-04-27 03:54 GMT
ஜோலார்பேட்டை பகுதியில் போலீஸ்காரர் உள்பட அவ்வை நகர், இடையம்பட்டி, தில்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்ததில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ்காரர் உள்பட ஜோலார்பேட்டை, சந்தைக்கோடியூர், முத்தானூர், பாச்சல், காவேரிப்பட்டு, பூசாரியூர், அவ்வை நகர், இடையம்பட்டி, தில்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஜோலார்பேட்டை காவல் நிலைய வீதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை சார்பில் அரசு டாக்டர்கள் சுனிதா, மற்றும் சுகாதார ஆய்வாளர் கோபி நகராட்சி ஆணையர் ராமஜெயம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சென்று அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் அப்பகுதியில் இருந்து வெளியே வரக்கூடாது என்றும், வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லக்கூடாது எனவும் பேனர் வைத்து தடுப்புகளை அமைத்து உள்ளனர்.
Tags:    

Similar News