செய்திகள்
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு

தொற்று பரவலுக்கு இடையே பிளஸ்-2 செய்முறை தேர்வு இன்று முடிந்தது

Published On 2021-04-23 10:25 GMT   |   Update On 2021-04-23 10:25 GMT
சென்னை உள்பட அனைத்து கல்வி மாவட்டங்களிலும் கல்வி அதிகாரிகள் மிகுந்த பாதுகாப்புடன் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வை நடத்தி முடித்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதம் 5-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற இருந்தது. கொரோனா தொற்று வேகமாக பரவியதை தொடர்ந்து தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தொற்று பரவல் அதிகரித்து வந்த போதிலும் பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் பாதுகாப்புடன் செய்முறை தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 28 விதமான பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.

சென்னை உள்பட அனைத்து கல்வி மாவட்டங்களிலும் கல்வி அதிகாரிகள் மிகுந்த பாதுகாப்புடன் செய்முறை தேர்வை நடத்தி முடித்துள்ளனர்.

இன்றுடன் கடைசி தேர்வு முடிந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகளின் செய்முறை தேர்வு மதிப்பெண் விவரங்களை சனிக்கிழமைக்குள் இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, மாநிலத்தில் சுமார் 85 சதவீத பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

சில பள்ளிகளில் மட்டும் இன்று மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்தன. தேர்வுகள் முடிந்ததை தொடர்ந்து இனி மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை. வீடுகளில் இருந்து பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.

தேர்வுக்கு கூட நுழைவுச்சீட்டு பெறுவதற்கு மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது.



மேலும் கொரோனா தொற்று பரவலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக இருக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு ஜூன் இறுதி அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதற்குள் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு தீவிர நடடிவக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
Tags:    

Similar News