செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்தலாமா?- கலெக்டர் கேள்விக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2021-04-23 05:45 GMT   |   Update On 2021-04-23 05:45 GMT
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரிய வழக்கில் இன்று தூத்துக்குடியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரிய வழக்கில் இன்று தூத்துக்குடியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி சூட்டில் இறந்த கிளாட்சனின் சகோதரர் ஸ்டீபன் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் எனது தம்பி உள்பட அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதாக அரசை ஏமாற்றி ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி செய்கிறது. எனவே எக்காரணம் கொண்டு அதற்கு அனுமதி வழங்க கூடாது. அப்படி வழங்கினால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.



தொடர்ந்து பேசிய கலெக்டர் செந்தில் ராஜ் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பொதுமக்கள், போராட்டக்காரர்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Tags:    

Similar News