செய்திகள்
விஜயகாந்த்

தண்ணீர் பந்தல் அமைத்து மக்கள் தாகத்தை தணிக்க வேண்டும்- தே.மு.தி.க. தொண்டர்களுக்கு விஜயகாந்த் கோரிக்கை

Published On 2021-04-23 04:53 GMT   |   Update On 2021-04-23 04:53 GMT
தமிழக மக்கள் இந்த கோடை காலத்தை சமாளிப்பதற்கு தே.மு.தி.க. சார்பில் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் கோடையின் உச்சிவெயிலை நினைவுபடுத்தும் அளவுக்கு இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடை காலத்தை சமாளிப்பதற்கு தே.மு.தி.க. சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும்.

ஆண்டுதோறும் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது வழக்கம்.

அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி மற்றும் கொரோனா பரவி வருவதால் மாஸ்க், சானிடைசர் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும். இந்த கோடைகாலம் முழுவதும் இப்பணியினை செயல்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News