செய்திகள்
ப சிதம்பரம்

இலவச தடுப்பூசி- தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்ற ப.சிதம்பரம்

Published On 2021-04-23 03:58 GMT   |   Update On 2021-04-23 03:58 GMT
நல்ல திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
சென்னை:

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப. சிதம்பரம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 18-44 வயது மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்படும், இதற்கான செலவைத் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.

இந்த நல்ல திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.



தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முன் வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News