செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் இதுவரை 48 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-20 20:20 GMT   |   Update On 2021-04-20 20:20 GMT
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 711 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதில் 60 ஆயிரத்து 957 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 711 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதில் 60 ஆயிரத்து 957 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 34 ஆயிரத்து 34 பேர் ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், 26 ஆயிரத்து 923 பேர் ‘கோவேக்சின்' தடுப்பூசியும் போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 48 லட்சத்து 68 ஆயிரத்து 105 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 41 லட்சத்து 90 ஆயிரத்து 388 பேர் ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், 6 லட்சத்து 77 ஆயிரத்து 717 பேர் 'கோவேக்சின்' தடுப்பூசியும் போட்டுள்ளனர்.



தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 12 ஆயிரத்து 967 சுகாதாரப் பணியாளர்களும், 7 லட்சத்து 29 ஆயிரத்து 610 முன்களப் பணியாளர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 லட்சத்து 71 ஆயிரத்து 204 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ள 17 லட்சத்து 54 ஆயிரத்து 324 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
Tags:    

Similar News