செய்திகள்
மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published On 2021-04-20 02:29 GMT   |   Update On 2021-04-20 04:28 GMT
நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை:

நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

நடிகர் விவேக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, அவரை பார்க்க சென்ற மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

மன்சூர் அலிகான் பேட்டி அளித்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.



இந்தநிலையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ், மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார்.

விவேக் அனுமதிக்கப்பட்டு இருந்த வடபழனி சிம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு இருந்துதான் மன்சூர் அலிகான் தடுப்பூசி தொடர்பான தகவல்களை தெரிவித்து இருந்தார்.

இதைதொடர்ந்து மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல அதிகாரி பூபேல், வடபழனி போலீஸ் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஐ.பி.சி. சட்டப்பிரிவுகள் 153, 270, 501(1) மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்படுதல், பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகள் அவர் மீது பாய்ந்துள்ளன. இந்த வழக்கில் மன்சூர் அலிகான் ஏற்கனவே முன் ஜாமீன் கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News