செய்திகள்
ப சிதம்பரம்

ஒரே நாளில் 4 பேரணிகளில் பேசுவது ஏன்?: பிரதமருக்கு ப.சிதம்பரம் கேள்வி

Published On 2021-04-20 01:52 GMT   |   Update On 2021-04-20 01:52 GMT
பா.ஜ.க.வின் பேரணிகள் எப்படிப்பட்டது என்பது பற்றி நமது அனைவருக்கும் தெரியும். பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், எதிர்க்கட்சிகளை துஷ்பிரயோகம் செய்ய பயன்படுத்தும் பல கோடி களியாட்டங்கள் நிறைந்ததுமாகும்.
சென்னை :

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் என்ற முறையில் தனது பொறுப்புகளை மறந்துவிட்டு, ஒரே நாளில் 4 பேரணிகளில் நரேந்திர மோடி பேசுவது ஏன்? பா.ஜ.க.வின் பேரணிகள் எப்படிப்பட்டது என்பது பற்றி நமது அனைவருக்கும் தெரியும். பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், எதிர்க்கட்சிகளை துஷ்பிரயோகம் செய்ய பயன்படுத்தும் பல கோடி களியாட்டங்கள் நிறைந்ததுமாகும்.



இந்த பேரணிகளில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் பிரதமரே அதில் பேசுவதுதான். இது, தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துவிடும் என்ற அச்சத்தினாலா?

பிரதமர் தனது கடமையை செய்வதில் அலட்சியமாக செயல்பட்டதற்கு எதிராக, மேற்கு வங்காளத்தில் இன்னும் தேர்தல் நடைபெற உள்ள 3 கட்டங்களை சேர்ந்த வாக்காளர்கள் தங்களுடைய கடுமையான அதிருப்தியை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News