செய்திகள்
கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

கைதிக்கு கொரோனா : கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

Published On 2021-04-19 02:25 GMT   |   Update On 2021-04-19 02:25 GMT
சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:

சாராயம் விற்றதாக மண்மலை கிராமத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரை கச்சிராயப்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவரை சிறையில் அடைப்பதற்கு முன்பு அவருக்கு கச்சிராயப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு கொரோனா பரிசோதனை முடிந்ததும், கைதியை போலீசார் விழுப்புரத்திற்கு அழைத்து சென்று சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவருடைய கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலைய போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கைதியை விழுப்புரம் சிறைசாலைக்கு அழைத்து சென்ற போலீஸ்காரர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News