செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 307 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-04-18 21:26 GMT   |   Update On 2021-04-19 07:43 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 217-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 956-ஆக உள்ளது.
திருப்பூர்:


திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றின் பாதிப்பு 50-க்கு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கடந்த ஒரு வாரமாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 200-ஐ தாண்டி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 307 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 131 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.



தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 217-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 956-ஆக உள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதித்த 2 ஆயிரத்து 30 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை சிகிச்சை பலன் இன்றி 231 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News