செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி மாவட்டத்தில் புதிய உச்சம் தொட்டது : ஒரே நாளில் 323 பேருக்கு கொரோனா

Published On 2021-04-18 18:15 GMT   |   Update On 2021-04-18 18:15 GMT
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 18,586 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா, ஒரே நாளில் 323 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். தொடர் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்றைய பரிசோதனை முடிவில் முசிறி தாலுகாவில் 17 பேர் உள்பட ஒரே நாளில் 323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் திருச்சி மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். 30 சதவீதம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது அதிக பட்சமே 250 பேருக்கு மட்டுமேதான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்த மட்டில் கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை 1,777 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாதிப்பு சதவீதம் 2.29 சதவீதமாக இருந்தது. ஒரே வாரத்தில் பாதிப்பு 3 சதவீதமாக உயர்ந்தது. தற்போது 5.5 சதவீதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 323 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 18,586 ஆக உயர்ந்துள்ளது. தொடர் சிகிச்சையில் 2,013 பேர் உள்ளனர். 125 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 16,378 ஆகும்.

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 46 வயது பெண் மற்றும் 52 வயது ஆண், 42 வயது ஆண் என மொத்தம் 3 பேர் நேற்று உயிரிழந்தனர். கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News