செய்திகள்
மணல்

பாபநாசம் பகுதியில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2021-04-18 10:42 GMT   |   Update On 2021-04-18 10:42 GMT
அனுமதியின்றி மணல் ஏற்றிய 2 மாட்டு வண்டிகளையும், காவிரி ஆற்றில் 4 மாட்டு வண்டிகள் என 6 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பாபநாசம்:

பாபநாசம் தாலுகாவில் வட்டாட்சியர் முருகவேல் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சரவணன், பாலசுப்பிரமணியன் கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ், சதீஷ்குமார், ஆரோக்கியபவுல்ராஜ், சிவப்பிரகாசம், அன்பரசு, கதிர்வேல், ராஜ்குமார், ஜோதி, பாண்டியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சரபோஜி ராஜபுரம் குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிய 2 மாட்டு வண்டிகளையும், காவிரி ஆற்றில் 4 மாட்டு வண்டிகள் என 6 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகளை பார்த்தவுடன் மணல் அள்ளியவர்கள் ஓடி விட்டனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News