செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-04-17 13:31 GMT   |   Update On 2021-04-17 13:31 GMT
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மங்களமேடு:

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தநிலையில் லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மணி குழுவினர் லப்பைக்குடிகாடு பஸ் நிலையம், கடைவீதி மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பகுதிகளில் முககவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு அவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரை கூறினர். இதேபோல் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் திருமாந்துறை டோல்கேட் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News