செய்திகள்
கொரோனாா தடுப்பூசி போட மறுத்ததால் தீக்குளிப்பதாக ஆவேசமாக கூறிய சிதம்பரவல்லியை படத்தில் காணலாம்.

தடுப்பூசி இல்லை என்று கூறியதால் ‘தீக்குளிப்பேன்’ என பெண் ஆவேசம்

Published On 2021-04-17 02:17 GMT   |   Update On 2021-04-17 03:19 GMT
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி பல மையங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நெல்லை :

இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி பல மையங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போடும் முகாமிலும் 30 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். இதற்கிடையே, பதிவு செய்தவர்களில் 10 பேருக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என்று கூறி, அவர்களை திரும்பி செல்லுமாறு மருத்துவ பணியாளர்கள் அறிவுறுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நெல்லை டவுனைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சிதம்பரவல்லி, தனக்கு தடுப்பூசி போடவில்லை என்றால் தீக்குளித்து விடுவேன் என ஆவேசமாக மருத்துவ பணியாளர்களிடம் கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு தடுப்பூசி போடும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள், ஏற்கனவே பதிவு செய்த 30 பேருக்கும் தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து சிதம்பரவல்லிக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் அங்கு வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 10 பேருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News