செய்திகள்
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை காணலாம்

செஞ்சி பகுதியில் மழை- 1,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

Published On 2021-04-15 06:56 GMT   |   Update On 2021-04-15 06:56 GMT
செஞ்சி பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது அறுவடை செய்த நெல்மணிகளை மூட்டையாக கட்டி விவசாயிகள் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த 2 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் இன்று விற்பனைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த மூட்டைகள் அனைத்தும் விற்பனைக் கூடத்தின் திறந்த வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனால் விவசாயிகளுக்கு கமிட்டி நிர்வாகம் வைத்திருந்த சுமார் 10 தார்ப்பாய்களை மட்டுமே நெல் மூட்டைகளை மூட தந்தனர். அந்த தார்ப்பாய்களை மட்டும் வைத்து விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை மூடி வைத்தனர்.

ஆனால் இன்று காலையில் திடீரென மழை பெய்தது. இதனால் 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


Tags:    

Similar News