செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி பெண் பலி

Published On 2021-04-14 22:25 GMT   |   Update On 2021-04-15 07:24 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக திருப்பூர் உள்ளதால் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 225 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை தொடங்கி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாளில் அதிகபட்சமாக நேற்று பதிவாகி இருக்கிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 509 ஆக இருக்கிறது.

திருப்பூரை சேர்ந்த 55 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி அதிகாலை அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 1,457 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பரவல் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீதியில் நடமாடும்போது முககவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News