செய்திகள்
முக ஸ்டாலின்

தெலுங்கு-கன்னட புத்தாண்டு: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2021-04-13 09:04 GMT   |   Update On 2021-04-13 09:04 GMT
தெலுங்கு, கன்னடமொழி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

திராவிட மொழிக்குடும்ப உறவின் அடையாளமான தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு- கன்னடமொழி மக்களுக்கு இனிய யுகாதி புத்தாண்டு வாழ்த்துகள்.

அவரவர் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் போற்றி பாதுகாத்து, ஆதிக்கத்திற்கு இடமின்றி, அன்பால் இணைந்து சகோதரத்துவம் காத்திடுவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News