செய்திகள்
இடஒதுக்கீடு

வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு

Published On 2021-04-12 16:34 GMT   |   Update On 2021-04-12 16:34 GMT
வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க  உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, வன்னியர் சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக போராட்டம் நடத்தியது. அதன்பின் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் தமிழக சட்டசபையில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்தச் சட்டத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

தேர்தலின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் இது தற்காலிகமானது எனக் கூறினர். ஆனால் முதல்வர் சட்டத்தில் தற்காலிக சட்டம், நிரந்தர சட்டம் எனக் கிடையாது என்றார். முதலமைச்சரே உறுதி செய்துவிட்டார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்திருந்தார்.
Tags:    

Similar News