செய்திகள்
ஆதார்- பான் கார்டு

பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்

Published On 2021-04-12 12:26 GMT   |   Update On 2021-04-12 12:26 GMT
கொரோனா அச்சறுத்தலை கருத்தில் கொண்டு, ஆதார்-பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆதார் - பான் கார்டு இணைப்புக்கான நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த மாதம் 31ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், கொரோனா அச்சறுத்தலை கருத்தில் கொண்டு, ஆதார்-பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் ஜூன் 30க்குள் இணைக்காவிட்டால் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த நேரிடும். அத்துடன், பான் கார்டும் செயல்படாது. எனவே, விரைவில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டியது அவசியமாகிறது. 

வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற முகவரியில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். 
Tags:    

Similar News