செய்திகள்
பணம்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க அரசாணை

Published On 2021-04-12 06:41 GMT   |   Update On 2021-04-12 06:41 GMT
நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
சென்னை:

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நாதஸ்வரம், தெருக்கூத்து, தாளம் கலைகளுக்காக 2 ஆயிரத்து 780 கலைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதர நாட்டுப்புற கலைஞர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மொத்தம் 6 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலித்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விதிமுறைக்கு உட்பட்டு தகுதி உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் சிறப்பு நிவாரண உதவி வழங்கப்படும்.

இதற்காக ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் கோடியே 20 ஆயிரம் நிதி தேவைப்படுவதாக கலை பண்பாட்டு துறை இயக்குனர் கோரி இருந்தார். இது ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை பதிவு செய்திருந்த நாட்டுப்புற கலைஞர்கள் 6 ஆயிரத்து 810 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் வழங்க தமிழக அரசு கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு நிர்வாக ஆணை வழங்கி அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News