செய்திகள்
மழை

சென்னையில் ‘திடீர்’ மழை

Published On 2021-04-12 05:42 GMT   |   Update On 2021-04-12 05:42 GMT
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக கடுமையான வெயில் கொளுத்துகிறது.

இந்த வெப்பம் காரணமாக மக்கள் இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தனர்.

இந்த நிலையில் சென்னை வாசிகளை மகிழ்விக்கும் விதமாக இன்று காலை திடீர் மழை கொட்டியது.

கோயம்பேடு, அண்ணா நகர், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையில் லேசான மழை கொட்டியது. உஷ்ணத்தில் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதல் அளித்தது.

இதே போல் திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மெண்ட், பொன்மலைபட்டி, எடமலைபட்டிபுதூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, கீரமங்கலம், ஆலங்குடி, வடகாடு, விராலிமலை பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.



மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடு காத்தான், செட்டிநாடு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News