செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருப்பூரில் ஒரே நாளில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-04-12 04:08 GMT   |   Update On 2021-04-12 04:08 GMT
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 639-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 639-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையவில்லை.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் ஒரே நாளில் நேற்று 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 77 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 304-ஆக உள்ளது.

மேலும், 1106 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 639-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் 229 பேர் சிகிச்சை பலன் இன்றி பலியாகியுள்ளனர்.

பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு என வெளிபகுதிகளில் இருந்து வருகிறவர்களும் கண்காணிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூர் பகுதிகளில் லட்சணக்கான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 தொழிலாளர்கள் முதல் 100 தொழிலாளர்கள் வரை வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நிறுவனங்களுக்கு சென்று செய்யப்பட்டு வருகின்றது.

கொரோனா அறிகுறியுடன் சந்தேகம் ஏற்படுகிறவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களை செலுத்தும்படியும் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல் விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட்டு திருப்பூர் திரும்பும் தொழிலாளர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News