செய்திகள்
வரிசையில் நின்று வாக்களித்த மக்கள்

தமிழகத்தில் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்தல் ஆணையம் வெளியீடு

Published On 2021-04-10 00:09 GMT   |   Update On 2021-04-10 00:09 GMT
234 தொகுதிகளை உள்ளடக்கிய தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
சென்னை:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இதில் அதிகபட்சமாக, பாலக்கோடு தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 36 ஆயிரத்து 843 வாக்காளர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 922 பேர் (87.37 சதவீதம்) வாக்களித்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 214 பேர் ஆண்கள், 1 லட்சத்து ஆயிரத்து 708 பேர் பெண்கள்.



குறைந்தபட்சமாக, சோழிங்கநல்லூரில் மொத்தமுள்ள 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 வாக்காளர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 948 பேர் (55.51 சதவீதம்) வாக்களித்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் ஆண்கள், 1 லட்சத்து 91 ஆயிரத்து 384 பேர் பெண்கள். 19 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி பேர் (72.81 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

இவர்களில் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் ஆண்கள், 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேர் பெண்கள், 1,419 பேர் 3-ம் பாலினத்தவர்.
Tags:    

Similar News