செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு காய்கறி விற்பனைக்கு கட்டுப்பாடு- காய்கறி விலை உயர வாய்ப்பு

Published On 2021-04-09 05:02 GMT   |   Update On 2021-04-09 05:02 GMT
வியாபாரிகள் கோயம்பேட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
சென்னை:

சென்னையில் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் வைத்து இருக்கும் வியாபாரிகள் கோயம்பேட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இனி இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்க முடியாத நிலை நாளை முதல் ஏற்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட உள்ளதால் காய்கறி மற்றும் பழங்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆன்லைன் வியாபாரம் அதிகரிக்க வழி ஏற்படும். அதுபோன்று ஆன்லைனில் வாங்கும்போது விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி விற்கும் சூழ்நிலையும் ஏற்படும்.. சில்லரை கடைகள் மூடப்பட உள்ளதால் காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்ந்து பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News