செய்திகள்
ஒட்டான்குளத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கூடலூர் ஒட்டான்குளத்தில் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Published On 2021-04-07 09:09 GMT   |   Update On 2021-04-07 09:09 GMT
கூடலூர் ஒட்டான்குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்:

கூடலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஒட்டான்குளம். இதன்மூலம் அப்பகுதியில் 406 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இருபோக நெல்சாகுபடிக்கு ஒட்டான்குளம் ஆதாரமாக உள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஒட்டான்குளம் மாசடைந்து வருகிறது.

இப்பகுதியை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மேலும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. குடிமகன்கள் மதுகுடித்துவிட்டு பாட்டில்களை குளத்தில் வீசிச்செல்கின்றனர். இதனால் ஒட்டான்குளம் மாசடைந்து வருகிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று அரைநிர்வாணமாக ஒட்டான்குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், நகராட்சியினர் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஒட்டான்குளத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும். சோலார் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். குளத்தை சுற்றி வேலிகள் அமைத்து வெளியாட்கள் உள்ளே வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Tags:    

Similar News