செய்திகள்
கோப்பு படம்.

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனை

Published On 2021-04-05 15:09 GMT   |   Update On 2021-04-05 15:09 GMT
டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனையானது.
திருவாரூர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தேர்தல் அமைதியான முறையிலும், சுமூகமாகவும் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிம பெற்ற மதுபான கூடங்கள் ஆகியைவை நேற்று முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறையினால் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மது பிரியர்கள் தங்களது உற்சாகத்திற்கு தடை ஏற்படாதவாறு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மது பாட்டில்களை வாங்கி குவித்தனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் டாஸ்மாக் கடைகள் மது விற்பனை அதிகரித்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகள் விற்பனையானது. இதனால் சரசரியாக நடைபெறும் மது விற்பனை விட கூடுதலான விற்பனை நடைபெற்றுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News