செய்திகள்
விருகாவூர் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.

கள்ளக்குறிச்சி மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்- காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

Published On 2021-04-02 17:41 GMT   |   Update On 2021-04-02 17:41 GMT
தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரம் மக்களின் 50 ஆண்டு கோரிக்கையான வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் உறுதியளித்தார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் நேற்று தியாகதுருகம் ஒன்றியம் முடியனூர், விருகாவூர், பொரசக்குறிச்சி, கணங்கூர், சாத்தனூர், எஸ்.ஒகையூர், கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியசிறுவத்தூர், மேலூர், எரவார், இந்திலி, வினைதீர்த்தாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரம் மக்களின் 50 ஆண்டு கோரிக்கையான வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களிலும் குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும், கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். எனவே கள்ளக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற கை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

இதில் தியாகதுருகம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, பெருமாள், எத்திராஜ், சண்முகம், காமராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன், கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அசோகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமொழி, வீரமுத்து, முத்தமிழ் கண்ணன், லோகநாதன், மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், வட்டார தலைவர் கொளஞ்சியப்பன், கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபால், மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, மாநில தொண்டரணி துணை செயலாளர் கூத்தக்குடி.பாலு, மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரசுராமன், தொகுதி செயலாளர் மதியழகன், ஒன்றிய செயலாளர் கலைஅமுதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News