செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

Published On 2021-03-24 02:38 GMT   |   Update On 2021-03-24 02:38 GMT
கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக நிர்வாகிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கம் செய்துள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுதல் மற்றும் வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்ற காரணத்தால், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த துறைமுகம் வடக்கு பகுதி அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி.எஸ்.பழனி, துறைமுகம் வடக்கு பகுதி மகளிர் அணி இணைச் செயலாளர் கே.சகுந்தலா, தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் ஸ்டார் எம்.குணசேகரன்,

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் இ.பவளவண்ணன். ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கணியூர் பேரூராட்சி செயலாளர் கே.ஏ.காஜாமைதீன், உடுமலைப்பேட்டை நகரத்தின் மாவட்டப் பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, உடுமலைப்பேட்டை நகர 1-வது வார்டு செயலாளர் கவிதா சிதம்பரநாதன், ஏரிபாளையம் பி.சிதம்பரநாதன்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கலசபாக்கம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் எம்.திருநாவுக்கரசு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.வி.ஆர். என்கிற வெங்கட்ராமன், திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.கே.விக்னேஷ், கருமண்டபம் பகுதி செயலாளர் ஆர்.ஞானசேகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் எவரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News