செய்திகள்
கோப்புபடம்

ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக காரில் கடத்திய 35½ கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2021-03-20 13:25 GMT   |   Update On 2021-03-20 13:25 GMT
ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக காரில் கடத்திய 35½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
திருச்சி:

ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். 

அந்த காரில் 35½ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கஞ்சாவுடன் காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், கம்பம் போச்சம்பள்ளியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 38), தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெய்குமார் (33) என்பது தெரியவந்தது. 

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும், 35½ கிலோ கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News