செய்திகள்
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராட்சத பலூனை கலெக்டர் கிரண்குராலா பறக்க விட்டபோது எடுத்த

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூன் - கலெக்டர் கிரண்குராலா பறக்க விட்டார்

Published On 2021-03-10 01:13 GMT   |   Update On 2021-03-10 01:13 GMT
கள்ளக்குறிச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூனை கலெக்டர் கிரண்குராலா பறக்கவிட்டார்.
கள்ளக்குறிச்சி:

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பொதுமக்கள் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வாங்காமல் நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் கோலப்போட்டி, பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வருவாய்த்துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா கலந்துகொண்டு ராட்சத பலூனை பறக்க விட்டார். பலூனில் 100 சதவீதம் நேர்மையாக அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், போடுவோம் ஓட்டு, வாங்கமாட்டோம் நோட்டு என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. நிகழ்ச்சியில் தாசில்தார் பிரபாகரன், நகராட்சி ஆணையர் குமரன், பொறியாளர் பாரதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அலுலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News