செய்திகள்
கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்சி.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-03-08 15:35 GMT   |   Update On 2021-03-08 15:35 GMT
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, கடந்த 2 மாதங்களாக சுகாதாரப் பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ள சர்க்கரை நோய், சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது தாசில்தார் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உள்பட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

அப்போது மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 8,400 முன்களப் பணியாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 12 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதிக்குமேல் 2-வது கட்ட தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதுவரை 1663 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர், எனத் தெரிவித்தார்.

அப்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், சுகாதார நல அலுவலர் வீராசாமி, தொழில் நுட்ப உதவியாளர் பிரேம் ஆனந்த், டாக்டர் கீர்த்தி மற்றும் நர்சுகள் உடனிருந்தனர்.

இதையடுத்து தேர்தல் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News