செய்திகள்
சீமான்

சீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2021-03-07 15:13 GMT   |   Update On 2021-03-07 15:13 GMT
சீமான் இந்த முறை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப் போவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், ஒரே மேடையில் வேட்பாளர்கள் அனைவரையும் சீமான் அறிமுகம் செய்தார். 

பின்னர் பேசிய அவர், யாருடனும் கூட்டணி இல்லை என்றும், 234 வேட்பாளர்களில் 117 பேர் பெண்கள், அதவது 50 சதவீத வேட்பாளர்கள் பெண்கள் என்றும் அறிவித்தார். அதன்பின் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். சீமான் திருவொற்றியூரில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், இந்த முறை  கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின்னர், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News