சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்
பதிவு: மார்ச் 07, 2021 20:19
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்வு செய்துள்ளார்.
பெண்களுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், இந்த தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்தார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஒரே மேடையில் வேட்பாளர்கள் அனைவரையும் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.