செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் 1,857 பேருக்கு கொரோனா சிகிச்சை

Published On 2021-03-07 09:19 GMT   |   Update On 2021-03-07 09:19 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் எணணிக்கை 238 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை:

தமிழகத்தில், அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் குணமடைந்து உள்ளனர். 1,857 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இது நோய் தொற்று பாதிப்பில் 1 சதவீதம் ஆகும்.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 200-க்கு கீழ் இருந்த நிலையில் தொற்று அதிகரித்து 243 ஆக உயர்ந்தது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் எணணிக்கை 238 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த 1-ந் தேதி நிலவரப்படி கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 198 ஆக இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் 40 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் தேனாம்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், அடையாறு மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு:-

திருவொற்றியூர்-33, மணலி-15, மாதவரம்-59, தண்டையார்பேட்டை-63, ராயபுரம்-137, திரு.வி.க. நகர்-118, அம்பத்தூர்-186, அண்ணாநகர்-196, தேனாம்பேட்டை-208, கோடம்பாக்கம்-238, வளசரவாக்கம்-132, ஆலந்தூர்-89, அடையாறு-176, பெருங்குடி-96, சோழிங்கநல்லூர்-45.
Tags:    

Similar News