செய்திகள்
சட்டசபை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினியில் ரேண்டம் முறையில் கலெக்டர் சமீரன் தேர்வு

தென்காசி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

Published On 2021-03-07 02:25 GMT   |   Update On 2021-03-07 02:25 GMT
தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் சமீரன், கணினியில் ரேண்டம் முறையில் 5 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்தார்.
தென்காசி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.

அதன்படி தென்காசியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் சமீரன், கணினியில் ரேண்டம் முறையில் 5 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்தார்.


பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளின் தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ேசக் அப்துல் காதர், தேர்தல் தாசில்தார் சண்முகம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News