செய்திகள்
பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டபோது எடுத்த படம்.

நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது

Published On 2021-03-07 02:15 GMT   |   Update On 2021-03-07 02:15 GMT
நெல்லை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க 15 பறக்கும் படை குழு மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்லை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க 15 பறக்கும் படை குழு மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் போலீஸ் மற்றும் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சோதனை சாவடி மற்றும் சாலைகளில் வரும் கார் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் துணை ராணுவ படையினரும், காவல்துறையினரும் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் வாகனங்களில் இருப்பிடத்தை கண்டறியும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து பறக்கும்படை குழுவுக்கு தெரிவிப்பதற்கு வசதியாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Tags:    

Similar News