செய்திகள்
தினேஷ் குண்டுராவ்

நாளை காலை திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு - தினேஷ் குண்டுராவ்

Published On 2021-03-06 18:25 GMT   |   Update On 2021-03-06 18:25 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.
சென்னை:

தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய 5 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் தொகுதி உடன்பாடு உறுதியாகவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாளை காலை 10 மணிக்கு திமுக -காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News