செய்திகள்
வாகன சோதனை

சட்டசபை தேர்தல்: கூத்தாநல்லூரில், போலீசார் இரவு-பகலாக வாகன சோதனை

Published On 2021-03-05 14:49 GMT   |   Update On 2021-03-05 14:49 GMT
சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூத்தாநல்லூரில் போலீசார் இரவு-பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூத்தாநல்லூர்: 

தமிழக சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி அறிவுறுத்தலின்படி, கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கூத்தாநல்லூர் பகுதியில் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

வாகன சோதனைக்காக திருவாரூர்-மன்னார்குடி சாலையில் கூத்தாநல்லூர் அருகே உள்ள குடிதாங்கிச்சேரி என்ற இடத்தில் போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர். கார், வேன், ஆட்டோ, லாரி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. 
Tags:    

Similar News