செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 183 கன அடியாக நீடிப்பு

Published On 2021-03-05 09:58 GMT   |   Update On 2021-03-05 09:58 GMT
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 102.60 அடியாக உள்ளது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று அணையின் நீர்மட்டம் 102.71 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 102.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 183 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Tags:    

Similar News