செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் .

வாலாஜா டோல்கேட்டில் ரூ.7 லட்சம் குட்கா, புகையிலை பொருட்கள் மினிவேனுடன் பறிமுதல்

Published On 2021-03-04 14:56 GMT   |   Update On 2021-03-04 14:56 GMT
வாலாஜா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட்டில் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கட்ராமன், ரகுபதி, பாஸ்கர் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி வந்த ஒரு மினிவேனை நிறுத்தி சோதனைச் செய்தனர். அதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள் மற்றும் ஹான்ஸ் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து மினிவேன், குட்கா பாக்குகள், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மினிவேன் டிரைவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னதம்பி (வயது 27), அவருடன் வந்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி வில்சன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News