செய்திகள்
சுங்கான்கடை அருகே மலையில் எரியும் தீ

சுங்கான்கடை அருகே மலையில் பற்றி எரியும் தீ

Published On 2021-03-04 10:42 GMT   |   Update On 2021-03-04 10:42 GMT
சுங்கான்கடை அருகே மலையில் தொடர்ந்து தீ பற்றி எரிவதால் ஏராளமான காட்டு விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் மலைகள் சூழந்த கொண்ட மாவட்டம் ஆகும். இதில் சுங்கான்கடை, பார்வதிபுரம், தோவாளை மற்றும் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மலை தொடர்களில் அவ்வப்போது தீ பிடிப்பது வழக்கமாகி உள்ளது.

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை மலையில் பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிகிறது. சிறிய மரங்கள் முதல் பெரிய பெரிய அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் என அனைத்தும் தீக்கிரையாகி வருகின்றன. அதிலும் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதாலும், பலத்த காற்று காரணமாகவும் தீயானது மேலும், மேலும் பரவி வருகிறது.

மலையில் பற்றி எரியும் தீயை இரவு நேரத்தில் பார்க்கும் போது எரிமலை வெடித்து குழம்பு வடிவது போல காட்சி அளிக்கிறது. மேலும் பகலில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து தீ பற்றி எரிவதால் ஏராளமான காட்டு விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் மலை உச்சியில் எரியும் தீ கீழ் பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News